UA-185718175-1UA-185718175-1 kavidaigal: கண் தானம் .

Monday, 29 April 2013

கண் தானம் .

 கண் தானம் .  

 





  கருவறையில்  பிறக்கிறான்

 இவ்வுலகில் நிமிர்ந்து நிற்கிறான். 

தாயின்  அன்பும்  உணர்கிறான்.

தந்தை  அளித்த  ஆடையும்  அணிகிறான்.

ஊட்டிய  அன்னையை  பார்த்ததில்லை

பூவின்  மணம் நுகர்கிறான்

பூக்கும் தோட்டம்  பார்த்ததில்லை

அழகான  இந்த உலகம் 

அவனுக்கு  மறைந்தே இருக்கிறது.

அன்பும் பாச  உணர்வும்

        அவனுக்கு இருளிலே  வளர்ந்தது

தன் முக அழகை கூட பார்க்க

    இயலாமல்  கண்ணீரை  தொடுகிறான்


விழி  திறந்து  இவ்வுலகில் வாழ்வதே கடினம்     

 இந்த  கடின உலகில் வாழ  துணிகிறான்

  விளக்கு  ஏற்றினால் 

            எவ்வறையும்  தெளிவுப்பெறும்

நாம்  செய்யும்  உதவி 

           அவன்  வாழ்வும்  ஒளி பெறும்

உன் உடலை மண்  

          பங்கிட்டால்  வீணாய்போகும்

நீ உன் உடலை பங்கிட்டால்  

         அவன் வாழ்க்கை  உயிர் பெறும்

கண் தானம் செய்வோம்  

        அவன் உயிராய்  வாழ்வோம்




No comments: