மனித இருளறை
போட்டி என்று வாழ்வை இழந்தான்
மதுவை கொண்டு உயிரை அறுத்தான்
சாலை ஓரம் குருதி தெளித்தான்
தள்ளி போனேன் சுட்டு கொன்றான்
விட்டு சென்றேன் பிச்சை எடுத்தான்
நாகரிகம் என்று பன்பாட்டை களைத்தான்
மதித்தவர்களை மிதிக்க செய்தான்
மிதிப்பவர்களிடம் ஆசி பெற்றான்
இரக்கம் அற்ற சிலையாய் நின்றான்
திருத்தியவரை காட்டி கொடுத்தான்
தாய் நாட்டை வெட்டி போட்டான்
அன்னிய பன்பாட்டை தலையில் சுமை கொன்டான்
சுமையால் புதைவது தெரியாமல் வாழ்க என்றான்