UA-185718175-1UA-185718175-1 kavidaigal: மனித மிருகம்

Sunday, 14 April 2013

மனித மிருகம்

                                                              மனித மிருகம் 










அன்னையின் முகம் பார்த்தே 

சூரியனும் உதிக்கும் 

   காலை நேரங்களில் 

   தென்றலும் பூத்திடும் 

 தந்தை புகழ் பாடவே

 தினமும் பறவைகள் பாடும்

 அருள் பெற்ற கற்சிலையாய்

 இருப்பது நம் பெற்றோர் 

செவ்வமாய் நம்மை செதுக்கியவர்களை

 சிதர வைக்கின்றாய் 

சில்லரைக்கு விற்று இருக்கின்றாய்

 உணவுக்காக கண்ணீருடன் கைநீட்டி

 நிற்பவர் நம்மை பெற்ற தெய்வங்கள் தானே

 நமக்காக வாழ்க்கையில்  போராடியவர்களை 

நாமே வாழவைப்பது இல்லை 

இருக்க சிறு இடமும் அளிப்பதில்லை

 இதை நினைக்கையில் என் கண்களும் கலங்குதே !

 உடலில் நல்லுயிரும் இருந்திருந்தால் 

இந்நிகழ்வு நிகழ்ந்திடுமா ?  

கடவுள் செய்த தவறுகளிலே

ஆறாம் அறிவே முதலிடமே !

 ஐந்தறிவு விலங்குகளும் 

கூட்டமாக வாழ்ந்திடுமே! 

இதை நினைக்கையில் மனிதனை விட 

விலங்காய் இருப்பதே மேல்!!!

No comments: