இரண்டாம் காதல்
அவளை பார்த்தவுடன் ,
முள்ளில் பூத்திடும் முத்தாய் மாறினேன்
பாதையை மறைந்திடும் பனியாய் போகிறேன்
குளிரில் நடுங்கும் குழந்தையாய் மாறினேன்
மழையில் முளைத்திடும் விதையாய் இருக்கிறேன்
வானில் இருந்து தொலைந்து போகும் மேகமாகிறேன்
இருப்பிடம் இருந்தும் இரவில் மறைந்து போகிறேன்
காற்றும் என்னை இழுத்துச் செல்லுதே !
உடம்பின் செல்கள் விட்டு விலகுதே!
காதலே தொலைந்து போ...... காதல் நீ மறைந்து போ....
அது ஆளை விழுங்கிடும் முதளையின் கூட்டம்
கண்ணை உருத்திடும் துகள்களின் உருவம்
உயிரை பறித்திடும் விஷத்தின் பிறப்பு
வேண்டாம் இந்த பாழாய் போன காதல்...
அவளின் நினைவுகளே என்னை விட்டு மறைந்து விடு.......

No comments:
Post a Comment