இருளில் குழந்தை வளருதே !
பாட சாலை செல்லாமல்
பட்டறையில் மலருதே!
பள்ளி கட்டணம் பிடியின் குள்ளே
பள்ளியின் கதவும் திறப்பதில்லை
உணவு போட்டு வளர்த்த கல்வி
பெற்றோர் மனததை திறப்பதில்லை
விழுது படிந்து இருந்தால் கூட
கூடு எதுவும் அமைவதில்லை
பள்ளி கூடம் திறந்தால் கூட
பணமோ அவனை விடுவதில்லை
கண்களிலே கண்ணீர் சேர்த்து
மாடு ஓட்டி சென்ற பிள்ளை
கூடி சென்று படிப்பதில்லை
மனம் விரும்பிய படிப்பை
ஏழ்மை கொஞ்சம் தடுக்கிறதே!
அரசு செய்யும் திட்டங்கள் எல்லாம்
அறியாமையும் விழுங்கிடுதே!

No comments:
Post a Comment